என் அண்ணன் ஆஸ்திரேலியா வில் இருந்து போன வாரம்
இந்தியா வந்து உள்ளார்.அவருடைய இந்தியா நண்பரின்
எந்தரன் படத்துக்கு டிக்கெட் வாங்கிய அனுபவத்தை
சொன்னார். இபடியும் நூதன மோசடிகள் சென்னையில் நடக்குது .
vrkmphoto.com
நண்பர் எந்தரன் படம் ரிலீஸ் ஆன அன்றே படம் பார்க்க டிக்கெட்
வாங்க முயற்சி செய்து கிடைக்காமல் போகவே ப்ளாக் ல்
வாங்க முயன்று இருக்கிறார்...ஐநூறு பணத்தை ப்ளாக்கில்
விற்ற நபர் .ஒரு நிமிஷம் இருங்க போலீஸ் கவனிக்கிறார்கள்
இதோ டிக்கெட் .. அவர்கள் கண்ணில் படாமல் அந்த பக்கம் எடுத்து
வருகிறேன் என்று சென்றவர் தான். இவர் ரூபாயை தந்து விட்டு
கால் கடுக்க நின்றது தான் மிச்சம்.சரி வேறு டிக்கெட் ப்ளாக்ல்
கிடைக்கிறதா என்ற பார்க்க ஒருவர் இருநூற்றி ஐம்பது ரூ
விற்று கொண்டு இருந்தார். பரவா இல்லை , இருநூற்றி ஐம்பது
ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் வாங்கி
கொண்டு உள்ளே சென்று அமர்ந்தார். திரை அரங்கம் உழியர்
உள்ளே அமர்ந்து இருந்தவர்கள் மீது லைட் அடித்து சீட் நம்பரை
உற்று நோக்கி ,நண்பர் அருகே வந்ததும் ..எழுப்பி விட்டு வேறு
ஒருவரை அமர சொல்லி விட்டு இவரை வெளியே அழைத்து வந்தார்.
நண்பர் பரிதாபமாக நான் ப்ளாக்ல் டிக்கெட் வாங்கி உள்ளே வந்தேன்
என்று கெஞ்சி கேட்க !! டிக்கெட்டை வாங்கி செக் செய்த உழியர்
அது கலர் செராக்ஸ் என்பதை கண்டு பிடித்து அனுப்பி விட்டார்.
நொந்து போன நண்பர் எழுநூற்றி ஐம்பது ரூபாய் இழந்தும்
படம் பார்க்க முடியாமல் சோகமாக வீடு வந்து சேர்ந்தார்.
மெல்போன் நகரில் என் அண்ணன் எந்தரன் படத்தை ,நம்
ஊரு ரூபாய்க்கு எட்டு ஆயிரம் கொடுத்து (டாலர்) ரிலீஸ்
ஆன அன்று பார்த்து மகிழ்ந்தாரம் !நண்பர் பாவம்!