10 :10 :10
இன்று முக்கிய நாள் !!! பத்து
பசி வந்தால் பத்தும் பறந்து விடும்!
அதனால் இந்த நாளை "HUNGER FREE DAY ,"
உலக உணவு நாள் என்று அறிவிபோம்!!
ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. "பசி" என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.
உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள்ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; இக்கணக்கு 1977-1978 ஆண்டுகளில் 51.3% ஆக இருந்ததிலிருந்தும், 1993-1994 ஆண்டுகளில் 36% ஆக இருந்ததிலிருந்தும் தற்பொழுது சரிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது 1980 ஆம் ஆண்டில் 90 சதவீதமாக இருந்தது. அனைத்துலக வறுமைக்கோட்டின் படி நகரத்தில் வாழ்வோர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவாக ஈட்டுவதும் (ஒரு நாளைக்கு 1.25 டாலர் என்பது அதற்கு ஈடான பொருள் வாங்கு திறன் நாளொன்றுக்கு 21.6 இந்திய உருபாய்), சிற்றூர்களில் வாழ்வோர் நாளொன்றுக்கு இந்திய உருபாய் 14.3 க்கும் கீழாக ஈட்டுவதுமாகும் ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், சிலர் 41.6% பேர் ஒரு நாளைக்கு $1 குறைவாகப் பெற்று பாகிஸ்தானின் 22.6% பேருடன் ஒப்பிடுகையில் வாழ்கின்றனர்.
2 comments:
நல்ல கட்டுரை!
thanks
Post a Comment
welcome