அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி !!
விரலை சுட்டி காட்டுவதற்கு முன்பு நாம் எப்படி இருக்கிறோம்
என்று பார்ப்பது மிக நல்லது!!ஊருக்கு தான் உபதேசம் என்று
இருக்க கூடாது..நம்மை சரி செய்து கொண்டு பிறகு அடுத்தவர்களை
சுட்டி காட்டி பேசுவது சிறந்தது,!அதை தான் அனைவரும் நினைப்பார்.
ஒரு அழகிய கதை படித்தேன்.!!
ஒரு நண்பன் தன் வீட்டுக்கு வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை
பார்ப்பது பழக்கம்.!ரோடடில் போவோர் வருவோரை நக்கலாக பார்ப்பார்.
எதிர் வீட்டில் இருக்கும் நபர்களை பற்றி மிகவும் அக்கறை அவருக்கு
எப்போதும் உண்டு...முதல் நாள் அவர்கள் வீட்டில் வெளியே காய
போட்டிருக்கும் துணிகளை பார்த்து சே!என்ன மனிதர்கள் இவர்கள்
துணி அனைத்தும் பழுப்பு நிறமாக உல்ளது..சரியா துவைக்க
மாட்டார்கள் போல...வேறு துணி வாங்கலாம்.. ஏன் இப்படி கஞ்ச
பிசினாரிகலாக இருக்கார்கள்? என்று நினைத்து கொண்டார்.
அடுத்த நாள் வேறு துணிகள் எதிர் வீட்டில் காய போட்டு
இருப்பதை பார்த்தார் நண்பர்.உடனே தன் மனைவியை அழைத்து
பாரு துணிகள் எல்லாம் எத்தனை அழுக்காக இருக்கு ..என்ன
மனிதர்கள் இவர்கள் ?இப்படி இருக்கிறார்கள் என்று காட்டினார்.
அதற்கு அடுத்த நாளும் எதிர் வீட்டை பார்த்து டென்சன் ஆனார்.
இன்று மனைவி,மகன் மகள் அனைவரையும் கூப்பிடடு எதிர்
வீட்டில் காயும் துணிகளை பழுப்பாக இருப்பதை காட்டினார்.
இவருடைய மகன்..அப்பா அவர்கள் துணியின் மீது அழுக்கு
கிடையாது! என்று ஒரு துணியை எடுத்து வந்து அவர்கள் வீட்டு
ஜன்னல் கதவை நன்றாக துடைத்து விட்டு !!இப்போ பாருங்க
அவர்கள் துணி எவ்வளவு பளிச்னு இருக்கு !!நம் வீட்டு ஜன்னல்
கன்னாடி மீது உள்ள அழுக்கை சரியாக துடைகாததால் தான்
நமக்கு அவர்கள் வீட்டு துணி அனைத்தும் பழுப்பாக காட்சி
தந்து இருக்கு என்று புரிய வைத்தான் அவருடைய மகன்.
முகத்தை தொங்க போட்டு கொண்டு தன் வேலையே பார்க்க
போய் விட்டார் நண்பர்.என்ன நான் சொல்வது சரி தானே?
0 comments:
Post a Comment
welcome