Thursday, December 30, 2010

எங்க வீட்டு மலைஸ்



எங்க வீட்டில் மலையம்மா என்று ஒரு பாட்டி வேலை செய்கிறார்.
படு சுறுசுறுப்பு .அதனால் அவருக்கு ரோபோ என்று பெயர் வைத்து 
இருக்கிறோம்.கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்.எந்திரன் ரோபோ 
போல தெளிவா சொன்னால் தான் எதயும் செய்வார்.அடுப்படியில் 
மேடையில் சாமான்களை ஒதுக்கி கொடுத்தால் மட்டுமே 
பாத்திரங்களை கழுவுவார்.இல்லா விட்டால் காஸ் லைட்டர் முதல் 
ஜினி டப்பா ,காபி தூள் டப்பா என்று அனைத்தையும் சாமானுடன் 
கழுவி கவத்தி விடுவார்.எங்க அம்மாவும் மலைஸ் ம் காமெடி தான்!

போன வாரம் மீன் தொட்டியில் மீனை மாற்றினோம்..சிறிது தண்ணீருடன் 
மீன் துள்ளி கொண்டு இருந்தது.மீன் தொட்டியை கழுவி விட்டு வருவதற்குள் 
பாத்திரத்தை காணோம்.!!பகீர் என்றது.!!மலைஸ் தண்ணீரை சின்க் குள் 
மீனோடு கொட்டி விட்டு பாத்திரத்தை தேய்ப்பதை பார்த்து அம்மா ஸ்லொவ் 
மோசன் ல் சாக துடித்து கொண்டிருக்கும் மீனை காப்பாற்றி மீண்டும் விட்டார்.




  ஐம்பது ரூபாய்க்கு நேற்று இளநீர் வாங்கி பாத்திரத்தில் வைத்து விட்டு 
வருவதர்க்குள்...மலைஸ் கீழே கொட்டி விட்டு சுத்தமாக அலம்பி வைத்து
விட்டு ..வேலை முடிஞ்சது அம்மணி ..நான் கிளம்புறேன்..என்று கிளம்பிட்டார்.

இதை எல்லாம் மிஞ்சும் வகையில் .அம்மா நவராத்திரி கொலு சமயம் 
பொம்மைகளை இறக்கி.. மலயம்மா இந்த பொம்மைகளை தூசி போக 
கிளீன் பண்னணும் எடுத்துட்டு போங்கனு சொன்னது தான் தாமதம் !
குழாய் அடியில் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து பொம்மைகளை ஓவ்வன்றாக 
போட ஆரம்பிச்சாச்சு !! அம்மாவுக்கு பிபி ஏறி ஓடி வந்து குழாயை மூடினாங்க.

ஏன் கண்ணு.. சுத்தமா கழுவி தரேன்..அப்ப தான் பளிச்சுன்னு இருக்கும் என்றார்.
அதனால் மலைஸ் ரோபோ என்று பேர் வைத்து இருக்கிறோம் ..ரோபோ போலவே 
உயரமாக நடந்தும் வருவார்.,..தினம் காமெடி தான் போங்க.

6 comments:

Asiya Omar said...

மலையம்மா காமெடி சூப்பர்.எந்திரன் ரஜினி டிவியை போடுன்னு சொன்னவுடன் டிவியை போட்டு உடைச்சது தான் நினைவு வருது.

Philosophy Prabhakaran said...

மீன்கள் நலமாக இருக்கின்றனவா :(

Anonymous said...

பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

chelas said...

ஆமாம் ஆன்ட்டி .
கருத்துக்கு மிக்க நன்றி.

chelas said...

philosophy prabhakaran அண்ணா..மீன்கள் நலமே!!
புத்தாண்டு வாழ்த்துகள் !

chelas said...

பாண்டிச்சேரி வலைப்பூ..நன்றி.

Post a Comment

welcome

Translater