நானும் என் அம்மாவும் எங்கள் குடும்ப நண்பர் இல்ல விழாவுக்கு
செல்ல தயாரானோம் அவர் பெண் வரவேற்பு அன்று.. கிபிட் வாங்கி
கொண்டு மண்டபம் சென்றோம் ..அங்கு வரவேற்பு நிகழ்ச்சி அறிகுறி
எதுவும் இல்லை..ஒரே குழப்பத்துடன் தேதி மாறி வந்த விட்டோமா?
அல்லது மண்டபம் மாற்றி வந்து விட்டோமானு .ஒரே டென்ஷன் வேறு.
அருகில் இருந்த கடையில் விசாரித்தால்... எங்களால் நம்ப முடியலை. !!
கல்யாணம் நடக்க வில்லை .மணப்பெண் தான் வேலை பார்க்கும் ஊரில்
கல்யாணம் நடக்கும் தேதிக்கு முன்பே திருமணம் செய்து கொண்டாராம் !!
ஒரே ஷாக் ஆக இருந்தது.. வந்த சுவடு தெரியாமல் வீடு திரும்பிநோம் !!
கல்யாணாம் செய்யும் வயதில் உள்ள பெண்களே ஒரு வேண்டுகோள் :
நீங்கள் மனதுக்கு பிடித்தவரை கல்யாணம் செய்யுங்கள்.... ஆனால் வீட்டில்
சொல்லி விடுங்கள். பெற்றவர்களை ஏமாற்றாதீர்கள் !!எந்த பெற்றோரும்
நீங்கள் சொன உடன் ஒத்து கொள்ள மாட்டார்கள் தான். இருந்தாலும்
அவர்கள் சமமதததுடன் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் ..
கல்யாணம் நடக்கும் முன்பாவது உண்மையை சொல்லி விடுங்கள்.
பாவம் பெற்றோர்கள் .. வீணாக அலைச்சலுக்கும் , அவமானங்ககளுக்கும்
ஆளாகாமல் , மனகஷ்டம் ,பண விரயம் ஆகாமல் இருக்கும் அல்லவா?
இது எல்லோருக்கும் ஒரு பாடம் இல்லையா? சிந்திபோமா.. ? நன்றி.
0 comments:
Post a Comment
welcome